Saturday, June 28, 2008

எது தவறு

நான் என் காதலை
சொன்னவிதம் தாறா இல்லை
நான் உன்னை காதலித்ததே தவறா
தெரியவில்லை உன்னை என்னால்
ஒரு நொடியில் மறக்க முடியும்-ஆனால்
அந்த ஒரு நொடி என் வாழ்நாளில் என்றுமே இல்லை

Wednesday, June 25, 2008

ராட்டில் ஸ்நேக்


பல வகை பாம்புகள் தங்கள் வாலை உயர்த்தி அசைக்கும் பழக்கம் உடையவை. ஆனால் 'ராட்டில் ஸ்நேக்' மட்டும் வால் பகுதியை அசைக்கும் போது ஒருவித வித்தியாசமான ஒலி எழுப்பும். இதன் வால் பகுதி கிலுகிலுப்பை போன்ற அமைப்பில் இருக்கும். வாலை அசைத்து ஒலி எழுப்பும் ஒரே பாம்பு 'ராட்டில் ஸ்நேக்' தான்!.

மரங்கொத்தி


மரங்கொத்தி எவ்வளவு வேகமாக மரத்தைக் கொத்தினாலும் அவற்றின் மூளைக்கு பாதிப்பு வராததற்குக் காரணம் அதன் அலகுக்கும் மண்டை ஓட்டுக்கும் இடையே பஞ்சு போன்ற ஒரு அமைப்பு இருப்பதுதான். இந்த அமைப்பு மரங்கொத்தியின் அலகு கொத்துவதால் ஏற்படும் அதிர்வுகளை உள்வாங்கிக்கொள்ளும். அதோடு இவற்றின் மண்டை ஓடு கெட்டியாக இருந்தாலும் பஞ்சு போலவே இருக்கும். மற்ற பறவைகளின் மூளையை விட மரங்கொத்தியின் மூளை சிறியது. இப்படி வல காரணங்களால் மரங்கொத்தி நொடிக்கு 20 தடவைக்கு மேல் கொத்தினாலும் அவற்றுக்கு சின்ன தலைவலி கூட ஏற்படுவது இல்லை.

Tuesday, June 24, 2008

நிவாரணம்

உனக்கு ஓர் கடிதம் எழுத வேண்டுமென்றுதான்
முதன் முதலாய் கிறுக்கினேன்
காதல் கடிதம் என்கிற பெயரில்
கடிதத்தை ஏற்க மறுத்தாய்
கடிதம் கவிதையாகி இன்று வரை
தொடர்கிறது உனக்கும் எனக்குமான
நிரந்தரப் பிரிவை சரிசெய்யும் இடைக்கால நிவாரணமாய்...!

Saturday, June 21, 2008

கவிதை

நான் எழுதியவை

அனைத்தும் வெறும்

வார்த்தைகள் தான்

என்றாவது இதை-நீ

படிக்க நேர்ந்தால் ஒருவேளை

கவிதையாகலாம்...!

Friday, June 20, 2008

இந்தியாவின் புகழ்மிக்க இடங்கள்


ஆரோவில்: புதுச்சேரி அருகில் ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனத்தின் உதவியுடன் அமைந்துள்ள சர்வதேச கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
பிலாய்: மத்தியப்பிரதேசத்தில் உள்ளது. இங்கு இந்தியாவின் மிகப்பெரிய இரும்பு உருக்காலை உள்ளது.
புலந் தர்வாஸா: ஃபதேப்பூர் சிக்ரி கோட்டையின் உயரமான வாசல் இது. தக்காணத்தின் வெற்றியைக் கொண்டாட அக்பரால் கட்டப்பட்டது.
ஃபரிதாபாத்: டெல்லிக்கு அருகில் தொழிற்கூடங்கள் நிறைந்த நகரம்.
சாராநாத்: இங்குதான் புத்தர் தனது ஞானக்கொள்கைகளை முதன்முதலாக மக்களுக்குப் போதித்தார்.
சாந்திநிகேதன்: இது மேற்கு வங்காளத்தில் உள்ளது. தாகூரின் விஸ்வபாரதி பல்கலைக்கழகம் இங்கு உள்ளது.
தும்பா: இந்தியாவின் விண்வெளி தலம். திருவனந்தபுரம் அருகே உள்ளது.
ஸ்ரீஹரிகோட்ட: ஆந்திராவில் உள்ளது. இந்திய செயற்கைக்கோள் விண்வெளியில் ஏவப்படும் இடம்.
மகாபலிபுரம்: சென்னைக்கு அருகே உள்ளது. இங்கு பல்லவர் கால சிற்பங்கள் அழியா புகழ் பெற்று விளங்குகின்றன.

Thursday, June 19, 2008

அச்சுக்கலை எனும் அதிசயம்

அச்சுக்கலை எங்கே.. எப்போது.. எப்படி.. தோன்றியது தெரியுமா?! 2000-ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் சீனர்கள் காகிதம் தயாரிக்கும் முறையை கண்டறிந்தனர்.ஆரம்பத்தில் காகிதத்தில் அச்சு அடிப்பது மரக்கட்டைகளால்தான். அச்சு எழுத்துக்கள் கண்டுப்பிடிப்பதற்கு முன் புத்தகங்கள் கையால் எழுதப்பட்டன. பிறகு தாமிரத் தகடுகளில் உருவங்களை 'எட்ச்-என்கிரேவ்' செய்யும் முறைகள் உருவாயின. அந்தத் தகடுகளில் மைபூசப்பட்டு அதன் மீது காகிதத்தை வைத்து அழுத்தி பிரதிகள் எடுக்கப்பட்டது.

Wednesday, June 18, 2008

அறிந்து கொள்வோம்

'ஆண் பொருநை' என அழைக்கப்படும் நதி அமராவதி.
'கராத்தே' என்றால் வெறும் கை என்று பொருள்.
முதலையால் ஓர் இரும்பு ஆணியைக்கூட ஜீரணித்து விட முடியும்.
'சிறு மதுரை' என அழைக்கப்படும் ஊர் 'கீழச்சிவல்பட்டி'.
அமைதிக்கான நோபல் பரிசை அதிகம்பெற்ற நாடு அமெரிக்கா.
அமெரிக்காவில் 'ஹாலிவுட்' என்ற பெயரில் பத்து நகரங்கள் உள்ளன.

விளையாட்டுகளும் கோப்பைகளும்

டேவிஸ் கோப்பை - லான் டென்னிஸ்
டர்பி -
குதிரை பந்தையம்
கிராண்ட் பிரிக்ஸ் கோப்பை -
ஓட்டம்
ஜீல்ஸ்ரிமெட் கோப்பை -
உலக கால்பந்து ஆட்டம்
பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கோப்பை -
கோல்ஃப்
தாமஸ் -
உலக புப்பந்தாட்டம்
வெஸ்ட்செஸ்டர் கோப்பை -
போலோ
விம்பிள்டன் -
லான் டென்னிஸ்
அகில இந்திய மகாராஜா ரஞ்சித்சிங் தங்கக் கோப்பை -
ஹாக்கி
பர்துவான் கோப்பை -
பளு தூக்கும் போட்டி
ராதா மோகள் கோப்பை -
போலோ விளையாட்டு
ரஞ்சிக்கோப்பை -
கிரிக்கெட்
சந்தோஷ் கோப்பை -
கால்பந்தாட்டம்
ராணி ஜான்சி கோப்பை -
மகளிர் கிரிக்கெட்
வெலிங்டன் கோப்பை - படகுப் போட்டி

Monday, June 16, 2008

பூமி தினம்

பூமி தினம் 1969-ம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இத்தினத்தை ஏழை பணக்கார நாடுகள் என்னும் வித்தியாசமில்லாமல் அனைத்து நாடுகளும் அனுசரித்து கொண்டிருக்கின்றன.கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 25 நாடுகளில் முற்றிலும் காடுகள் அழிக்கப்பட்டு விட்டன என வனமேம்பாட்டுக்கான உலக கமிஷன் தெரிவித்துள்ளது.இரண்டாம் உலகப் போருக்கு முன்பு எடுக்கப்பட்ட புள்ளி விவரக் கணக்குப்படி உலகில் 6 ஆயிரம் கோடி ஹெக்டேர் பரப்பளவிற்கும் குறைவாக இருக்கிறது.இதற்கு காரணம் மனிதனின் பயன்பாட்டிற்காக மரங்கள் வெட்டப்பட்டுக் கொண்டிருப்பதேயாகும்.மேலும் காடுகள் அழிக்கப்படுவதால் அதிக அளவில் மனிதர்களுக்கு எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் பாதிப்பு உருவாவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபடுவதால் தான் எச்.ஐ.வி., கிருமிகள் உருவாகிறது.

Friday, June 13, 2008

ஒல்லியான கட்டடம்


'ஆடி அடங்கும் வாழ்க்கையடா.. ஆறடி நிலமே சொந்தமடா' என வாழ்க்கையில் நிதர்சனத்தை உணர்ந்தவர்கள். இந்த மூன்றடி அகல கட்டடத்தைப் பார்த்தால் கொஞ்சம் ஆடித்தான் போவார்கள். இத்தனைக் குறைந்த அகல கட்டடமா என்று வியப்பாகத்தான் இருக்கிறது.பிரேசில் நகரத்தில் இருக்கும் இந்தக் கட்டடம் படுக்க வைத்த மெகா சைஸ் ஸ்கேல் போல இருக்கிறது. கட்டடத்தின் உயரம் 10 மீட்டர்.மெல்லிசாக இருந்தாலும் ஒவ்வொரு அடுக்கிலும் ஒவ்வொரு விதமாக அலங்கரித்திருக்கிறார்கள். ஒரு தளத்தில் சிட் டவுட்டும் சமையலறையும் இன்னொரு தளத்தில் படுக்கை அறையும் வரவேற்பறையும். இவ்வளவு கச்சிதமாக ஒரு கட்டடத்தை இவ்வளவு அழகுணர்ச்சியுடனும் கட்ட முடியுமா என்பது பலரையும் பார்வையாளராக்கியுள்ளது. ஹெலன்டியா என்ற டிசைனரின் கைவண்ணமான இது இப்போது டூரிஸ்ட் ஸ்பாட்டாக விளங்குகிறது.மூன்றடுக்குகள் கொண்ட இந்த கட்டடம் இப்போது நான்காவது மாடிக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

ஜெபல் ஹஃபீப் மலைச்சாலை


பாலைவனப் பிரதேசத்தில் பாம்பு போல நெளிந்து கொண்டிருக்கும் இந்த பாதை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிசியம்.ஜெபல் ஹஃபீப் மலைச்சாலை இது. அம்மலையின் ஓர் எல்லையான ஓமனிலிருந்து குவைத்தை 90 நிமிடங்களில் அடைந்துவிட முடிகிறது. சாலையின் மொத்த நீளம் 73 மைல்கள். மலையில் மொத்தம் 60 வளைவுகள் இருந்தும்கூட 90 நிமிடங்களுக்குள் இந்தத் தூரத்தைக் கடக்க முடிவதற்குக் காரணம் பிரம்மாண்டமான நேர்த்தியான சாலைதான். இரவில் இதில் பிரயாணிப்பது சொர்க்கத்துக்கே போய் வந்தது மாதரி இருக்கிறதாம். பிரயாணித்தவர்கள் சொல்கிறார்கள்.இத்தனைக்கும் இது 4000 அடி உயர மலை உச்சியைத் தொட்ட சாலையாகும். பகலில் சுட்டெரிக்கும் வெயிலும் இரவில் குலை நடுங்க வைக்கும் குளிரும் இந்தப் பயணத்தில் கிடைக்கும்.

அறிந்து கொள்வோம்

* மனிதனின் வாழ்நாள் முழுவதும் வளரும் உறுப்பு காது ஆகும்.
* பி.பி.சி.யின் விரிவாக்கம் 'பிரிட்டிஷ் பிராட் காஸ்டிங் கார்ப்பரேஷன்' என்பதாகும்.
* 'எகிப்தின் நன்கொடை' என்று அழைக்கப்படுவது நைல் நதி ஆகும்.
* பசுவின் வயிற்றில் நான்கு அறைகள் உள்ளன.
* உலகில் 116 வகையான காகங்கள் உள்ளன.
* கங்காரு ஒரே தாவலில் 30 அடிகள் வரை தாண்டிவிடும்.

Thursday, June 12, 2008

இந்திய ரெயில்வே துறை

இந்திய ரெயில்வே துறை ஆசியாவிலேயே மிகப் பெரியதாகும். உலக அளவில் இரண்டாவது இடம் வகிக்கிறது. மும்பைக்கும் தானாவுக்கும் இடையே முதல் ரெயில் வண்டியை 1853-ம் ஆண்டு ஆங்கிலேயர் இயக்கினர்.இன்று இந்தியாவில் மொத்த இருப்புப் பாதைகளின் நீளம் 1 லட்சத்து 8 ஆயிரத்து 513 கி.மீ. ஆகும். அகல வழிப்பாதை மீட்டர் வழிப்பாதை குறுகிய வழிப்பாதை என்று மூன்று வகைப்பாதைகள் உள்ளன. வருகிற 2010-ம் ஆண்டுக்குள் எல்லா இருப்புப் பாதைகளையும் அகலவழிப் பாதையாக்க திட்டமிடப்பட்டுள்ளது.நம் நாட்டில் மொத்தம் 16 ரெயில்வே மண்டலங்கள் உள்ளன.இந்தியாவில் மொத்தம் 7 ஆயிறத்து 68 ரெயில்வே நிலையங்கள் உள்ளன. ரெயில் எஞ்சின்கள் 7 ஆயிரத்து 817. ரெயில் பெட்டிகள் 42 ஆயிரத்து 852. சரக்குப் பெட்டிகள் 2 லட்சத்து 44 ஆயிரத்து 419. ரெயில்வே ஊழியர்கள்17 லட்சம் பேர்.இவ்வளவு பிரம்மாண்டமான இந்திய ரெயில்வே பயணிகள் போக்குவரத்துக்கும், சரக்குகள் போக்குவரத்துக்கும் இன்றியமையாததாக உள்ளது.இந்திய ரெயில்வேயால் அண்மையில் அமைக்கப்பட்ட கொங்கண் இருப்புப் பாதை ஒரு பொறியியல் சாதனையாகக் கருதப்படுகிறது. இப்பாதை மும்பையிலிருந்தும் பிற வட இந்திய நகரங்களிலிருந்தும் பெங்களுர், திருவனந்தபுரம் செல்லும் நேரத்தையும், தூரத்தையும் வெகுவாகக் குறைத்துள்ளது. பல சுற்றுவழிப் பாதைகள் நேரடிப் பாதைகளாகி உள்ளன.'சதாப்தி எக்ஸ்பிரஸ்' 'ராஜதாணி எக்ஸ்பிரஸ்' போன்ற ரெயில்கள் இந்திய ரெயில்வேயின் முன்னேற்றப் படிகளாக அமைந்துள்ளன.

அறிந்து கொள்வோம்

* தேயிலை - பச்சைத் தங்கம்,பருத்தி - வெள்ளைத் தங்கம்,பெட்ரோல் - திரவத் தங்கம்,என்றும் சிறப்பித்துக் கூறப்படுகின்றன.
* உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு லண்டன் நகரிலும், வைரத்தின் மதிப்பு ஆலத்தின் ஆம்ஸ்டர்டாம் நகரிலும் நிர்ணயிக்கப்படுகின்றன.
* ஒளியின் வேகம் ஒரு வினாடிக்கு 1 லட்சத்து 86 ஆயிரத்து 281 மைல்கள் ஆகும்.
* எகிப்தில் மஞ்சள் நிறமும், துருக்கியில் ஊதா நிறமும், சீனாவில் வெள்ளை நிறமும் துக்க நிறங்களாகக் கருதப்படுகின்றன.

Tuesday, June 10, 2008

யானை

* பாலுட்டிகளிலேயே தாண்ட முடியாத ஒரே விலங்கு யானைதான்.
* மிக மெதுவான நாடித் துடிப்பைக் கொண்டது இது.
* யானை தனது தும்பிக்கையில் ஏழரை லிட்டர் தண்ணீரை வைத்திருக்க முடியும்.
* யானையால் ஒரே நாளில் 80 கேலன் தண்ணீர் பருக முடியும். (ஒரு கேலன் என்பது ஏறக்குறைய மூன்றே முக்கால் லிட்டர்)
* யானையால் 60 கட்டளைகள் வரை கற்றுக்கொள்ள முடியும்.
* யானை தாய்லாந்து நாட்டின் தேசிய விலங்கு.
* யானை 70 ஆண்டுகளுக்கு மேல் வாழும்.

Tuesday, June 3, 2008

பொன்மொழிகள்

மாபெரும் படைப்புகள் சில நொடிகளில் உருவாக்கப்படுவதில்லை அதில் பல வருட கடினமான உழைப்பு ஒளிந்து கொண்டிருக்கிறது. - ராபர்-டி-ஆலென்.
சான்றோருக்கு உரிய ஆற்றல்கள் இரண்டு! ஒன்று சகிப்புத்தன்மை மற்றும் பொருமை-எபிக் டெட்டஸ்
வார்த்தையில் மட்டும் பணிவு இருந்தால் போதாது நடத்தையிலும் இருக்க வேண்டும். - டில்டன்.
நம் வாழ்வில் கிடைக்க முடியாத பெருஞ்செல்வம் நாம் வீணே கழிக்கும் ஒவ்வொரு வினாடியும் தான். - மார்க்ஸ்
நன்மையைப் போலவே தீமையிலிருந்தும் மனிதன் பெரும் பாடங்களைக் கற்றுக் கொள்கிறான். - சுவாமி விவேபானந்தர்.
எதிர்பார்ப்பு இல்லை என்றால் வாழ்வில் ஏமாற்றமே இல்லை. - சாக்ரடீஸ்.

வருகைக்கு நன்றி!!!