Friday, June 13, 2008
ஒல்லியான கட்டடம்
'ஆடி அடங்கும் வாழ்க்கையடா.. ஆறடி நிலமே சொந்தமடா' என வாழ்க்கையில் நிதர்சனத்தை உணர்ந்தவர்கள். இந்த மூன்றடி அகல கட்டடத்தைப் பார்த்தால் கொஞ்சம் ஆடித்தான் போவார்கள். இத்தனைக் குறைந்த அகல கட்டடமா என்று வியப்பாகத்தான் இருக்கிறது.பிரேசில் நகரத்தில் இருக்கும் இந்தக் கட்டடம் படுக்க வைத்த மெகா சைஸ் ஸ்கேல் போல இருக்கிறது. கட்டடத்தின் உயரம் 10 மீட்டர்.மெல்லிசாக இருந்தாலும் ஒவ்வொரு அடுக்கிலும் ஒவ்வொரு விதமாக அலங்கரித்திருக்கிறார்கள். ஒரு தளத்தில் சிட் டவுட்டும் சமையலறையும் இன்னொரு தளத்தில் படுக்கை அறையும் வரவேற்பறையும். இவ்வளவு கச்சிதமாக ஒரு கட்டடத்தை இவ்வளவு அழகுணர்ச்சியுடனும் கட்ட முடியுமா என்பது பலரையும் பார்வையாளராக்கியுள்ளது. ஹெலன்டியா என்ற டிசைனரின் கைவண்ணமான இது இப்போது டூரிஸ்ட் ஸ்பாட்டாக விளங்குகிறது.மூன்றடுக்குகள் கொண்ட இந்த கட்டடம் இப்போது நான்காவது மாடிக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது.
Labels:
அறிந்து கொள்வோம்
ஜெபல் ஹஃபீப் மலைச்சாலை
பாலைவனப் பிரதேசத்தில் பாம்பு போல நெளிந்து கொண்டிருக்கும் இந்த பாதை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிசியம்.ஜெபல் ஹஃபீப் மலைச்சாலை இது. அம்மலையின் ஓர் எல்லையான ஓமனிலிருந்து குவைத்தை 90 நிமிடங்களில் அடைந்துவிட முடிகிறது. சாலையின் மொத்த நீளம் 73 மைல்கள். மலையில் மொத்தம் 60 வளைவுகள் இருந்தும்கூட 90 நிமிடங்களுக்குள் இந்தத் தூரத்தைக் கடக்க முடிவதற்குக் காரணம் பிரம்மாண்டமான நேர்த்தியான சாலைதான். இரவில் இதில் பிரயாணிப்பது சொர்க்கத்துக்கே போய் வந்தது மாதரி இருக்கிறதாம். பிரயாணித்தவர்கள் சொல்கிறார்கள்.இத்தனைக்கும் இது 4000 அடி உயர மலை உச்சியைத் தொட்ட சாலையாகும். பகலில் சுட்டெரிக்கும் வெயிலும் இரவில் குலை நடுங்க வைக்கும் குளிரும் இந்தப் பயணத்தில் கிடைக்கும்.
Labels:
அறிந்து கொள்வோம்
அறிந்து கொள்வோம்
* மனிதனின் வாழ்நாள் முழுவதும் வளரும் உறுப்பு காது ஆகும்.
* பி.பி.சி.யின் விரிவாக்கம் 'பிரிட்டிஷ் பிராட் காஸ்டிங் கார்ப்பரேஷன்' என்பதாகும்.
* 'எகிப்தின் நன்கொடை' என்று அழைக்கப்படுவது நைல் நதி ஆகும்.
* பசுவின் வயிற்றில் நான்கு அறைகள் உள்ளன.
* உலகில் 116 வகையான காகங்கள் உள்ளன.
* கங்காரு ஒரே தாவலில் 30 அடிகள் வரை தாண்டிவிடும்.
Labels:
அறிந்து கொள்வோம்
Subscribe to:
Posts (Atom)
வருகைக்கு நன்றி!!!