Thursday, October 23, 2008

எம்.ஜி.ஆரும் ஏழும்

எம்.ஜி.ஆருக்கு இயற்கையாகவே ஏழு எண் ராசியாக அமைந்தது.
அவர் பிறந்த நாள் 17-01-1917,
மதுரை பாய்ஸ் ஒரிஜினல் நாடக கம்பெனியில் சேர்ந்த போது வயது 7,
அவர் கதாநாயகனாக நடித்தப்படம் ராஜகுமாரி வெளிவந்த ஆண்டு 1947,
அவர் கட்சித் தொடங்கிய நாள் அக்டோபர் 17,
அவர் முதல்வராக பதவி ஏற்ற ஆண்டு 1977,
அவர் மறைந்த ஆண்டு 1987, அப்போது அவரின் வயது 70.

(இத்தகவல்கள் ஏழையின் சிரிப்பில் எம்.ஜி.ஆர் என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.)

Thursday, September 25, 2008

காதல் என்பது எது வரை?


கவிஞன் எதை காதலிக்கிறானோ, அதையெல்லாம் பாடுவான். ஒரு ஜெர்மானியக் கவிஞருக்கு தன்னோட மனைவி மேல காதல். தினம் நூறு வரில ஒரு கவிதை எழுதிடுவாரு. திடீர்னு ஒரு நாள் மனைவி இறந்துட்டாங்க. ஆனா அவர் தினசரி கவிதை எழுதறதை மட்டும் நிறுத்தலை. எழுதிட்டே இருந்தாரு. எழுதறதை தினம் மனைவி கல்லறையில கொண்டு போய் பாடிப் போட்ருவாரு. ஒருநாள், ஒரு மாசம் இல்லை. கிட்டத்தட்ட 44 வருடத்துக்கு இப்படி எழுதிட்டே இருந்த அவர் பேரு 'கார்ல் வில் ஹெல்ம்' நம்ம காதலிக்கிற ஆள் நமக்கு கிடைச்சாலும் சரி, கிடைக்கலைன்னாலும் சரி... கூட இருந்தாலும் சரி, இல்லேன்னாலும் சரி. நாம இருக்குற வரைக்கும் இருக்கிறதுக்கு பேர்தான் காதல்!

வீட்டு வரவேற்பறையில் எழுதி வைக்க

'பேசத் தகுந்த மனிதர் கிடைத்து, நீங்கள் பேசத் தவறினால், ஒரு தகுதியான மனிதரை இழந்து விட்டீர்கள். பேசத் தகுதியில்லாத மனிதரிடம் பேசிக் கொண்டிருந்தால், நீங்கள் உங்களையே இழந்து விட்டீர்கள் !'
கொஞ்சம் நீளமாக இருந்தாலும், வரவேற்பறைக்கு வர்றவங்களுக்கும் சரி உங்களுக்கும் சரி உபயோகமாக இருக்கும்.

Monday, September 15, 2008

திட்டம்

ஆயிரமாயிரம் மாலை
நேரங்கள் ஏதேதோ
பேசினோமே... வெட்டியாக
திட்டமிட்டுருக்கலாமே - அன்பே
ஒரு வேளை நாம் பிரிந்துவிட்டால்
எப்படி ஒருவரை ஒருவர் மறப்பது என்று

Monday, September 8, 2008

காதல் ஒரு மறதியா?

ஒரே நாளில்
எதிர்ப்பட்ட அழகியின்
முகம் மறந்துபோகலாம்
ஒரே வாரத்தில்
ரயில் சிநேகிதியின்
முகம் மறந்துபோகலாம்
ஒரே மாதத்தில்
கல்லூரித் தோழியின்
முகம் மறந்துபோகலாம்
ஒரே வருடத்தில்
பள்ளித் தோழியின்
முகம் மறந்துபோகலாம் - ஆனால்
எத்தனை யுகம் போனால்
உன் முகம் எனக்கு
மறந்துபோகும் என்னுயிரே!

Thursday, September 4, 2008

காதல் ஒரு முடிவு

கொல்
அல்லால்
எனைக் கொள்
கொல்லாது
கொள்வாயோ?
என் அன்பே
கொள்
அல்லால்
எனைக் கொல்
கொள்ளாது
கொல்வாயோ?
என் உயி(ரை)ரே

Saturday, August 23, 2008

கொஞ்சல்

நேரங்கழித்து வந்தாலும்
கோபிக்கிறாய்
நேரத்தோடு வந்தாலும்
கோபிக்கிறாய்
பரிசு வாங்கித் தந்தாலும்
கோபிக்கிறாய்
பரிசு வாங்காமல் வந்தாலும்
கோபிக்கிறாய்
பாடச் சொன்னாலும்
கோபிக்கிறாய்
பாடச் சொல்லாவிட்டாலும்
கோபிக்கிறாய்
வரவா என்று கேட்டாலும்
கோபிக்கிறாய்
அப்படிக் கேட்காவிட்டாலும்
கோபிக்கிறாய்
போகிறேன் என்றாலும்
கோபிக்கிறாய்
போகவில்லை என்றாலும்
கோபிக்கிறாய்
ஓ...
புரிந்துபோய்விட்டது!
நான் எப்போதும்
உன்முன்
கெஞ்சிக் கெஞ்சி...
உன்னை
இழுத்து இழுத்து...
அணைத்து அணைத்து...
முத்தமிட்டு முத்தமிட்டு...
செல்லம் செல்லம்
என்று
கொஞ்சிக்கொண்டே
இருக்க வேண்டும்
அப்படித்தானே?
அடடே
சிரிப்பைப் பாரு!!!

Friday, August 22, 2008

இதயமாற்றம்

உனக்கு அன்று
நல்லவனும் நானே!
உனக்கு இன்று
கெட்டவனும் நானே!
எனக்கு அன்று
நல்லவளும் நீயே!
எனக்கு இன்று
கெட்டவளும் நீயே!
அடடா!!!
இப்படி மாறிய
இந்த நாட்கள்
எல்லாம் - உன்
இதயத்தின்
நிறமாற்றம்
தந்த புதிய
ரணக் கோலம்தானே?

Thursday, July 24, 2008

உனக்காகவே

நீ சொன்ன 'பொய்கள்' பிடித்திருந்தது - ஆனால்
'பொய்யை' மட்டுமே சொன்னாயே !
அதுதான் பிடிக்கவில்லை
என் நெஞ்சக் கூட்டுக்குள்
உனக்கான இடம் இன்னமும்
பத்திரமாகத்தான் இருக்கிறது
நீதான் உனக்கான உணர்வையும்
ஏரியூட்டிப் போய் விட்டாய் - ஆனாலும்
எஞ்சிய சாம்பலிலும்
உனக்கான என் சுவாசம்
மிதமான வெப்பத்துடன்...

Tuesday, July 8, 2008

சத்தியம்

நாம் சந்தித்து விட்டுப் பிரியும் நேரம்
திரும்பிப் பார்க்கும் போதெல்லாம்
அழுகை வருகிறதென்றாய் - அன்று
முதல் திரும்பிப் பார்ப்பதில்லையென
சத்தியம் செய்து விட்டுப் பிரிந்தோம்
மறையும் கடைசி நொடியில் - நீ
பார்க்க மாட்டாயென நானும்
நான் பார்க்க மாட்டேன் என நீயும்
ஒன்றாய் திரும்பிப் பார்க்க
செய்த சத்தியம் எங்கேப் போனதென
சத்தியமாய் தெரியவில்லை

முட்டை உடையறதால குஞ்சு வெளியே வருதா..? இல்லை குஞ்சு வர்றதால முட்டை உடையுதா?


முதலில் கோழி வந்ததா முட்டை வந்ததா என்ற கேள்வி மாதிரி இதுவும் நல்லா இருக்கே! ஆனால் இதுக்குப் பதில் சொல்ல முடியுமே.. குஞ்சுதான் முட்டையை உடைத்து வெளியே வரும். முட்டை தானாக உடையாது. இதுக்காக குஞ்சுகளின் அலகில் 'எக் டூத்' என்ற முட்டை பல்லும் கழுத்தில் 'ஹேட்சிங் மஸில்' எனப்படும் முட்டையை உடைப்பதற்கான தசையும் இருக்கும். குஞ்சு வெளியே வர தயாரானதும் உள்ளிருந்தே தன் கூர்மையான முட்டைப் பல்லால் ஓட்டை போடத் தொடங்கும். கொஞ்சம் உடைந்ததும் கழுத்தில் இருக்கும் தசையால் உடைந்த பகுதியை உந்தித் கள்ளி கொஞ்சம் கொஞசமாக வெளியே வந்த சில நாட்களில் இந்த முட்டைப் பல்லும் தசையும் மறைந்துவிடும்.

Saturday, June 28, 2008

எது தவறு

நான் என் காதலை
சொன்னவிதம் தாறா இல்லை
நான் உன்னை காதலித்ததே தவறா
தெரியவில்லை உன்னை என்னால்
ஒரு நொடியில் மறக்க முடியும்-ஆனால்
அந்த ஒரு நொடி என் வாழ்நாளில் என்றுமே இல்லை

வருகைக்கு நன்றி!!!