இந்திய ரெயில்வே துறை ஆசியாவிலேயே மிகப் பெரியதாகும். உலக அளவில் இரண்டாவது இடம் வகிக்கிறது. மும்பைக்கும் தானாவுக்கும் இடையே முதல் ரெயில் வண்டியை 1853-ம் ஆண்டு ஆங்கிலேயர் இயக்கினர்.இன்று இந்தியாவில் மொத்த இருப்புப் பாதைகளின் நீளம் 1 லட்சத்து 8 ஆயிரத்து 513 கி.மீ. ஆகும். அகல வழிப்பாதை மீட்டர் வழிப்பாதை குறுகிய வழிப்பாதை என்று மூன்று வகைப்பாதைகள் உள்ளன. வருகிற 2010-ம் ஆண்டுக்குள் எல்லா இருப்புப் பாதைகளையும் அகலவழிப் பாதையாக்க திட்டமிடப்பட்டுள்ளது.நம் நாட்டில் மொத்தம் 16 ரெயில்வே மண்டலங்கள் உள்ளன.இந்தியாவில் மொத்தம் 7 ஆயிறத்து 68 ரெயில்வே நிலையங்கள் உள்ளன. ரெயில் எஞ்சின்கள் 7 ஆயிரத்து 817. ரெயில் பெட்டிகள் 42 ஆயிரத்து 852. சரக்குப் பெட்டிகள் 2 லட்சத்து 44 ஆயிரத்து 419. ரெயில்வே ஊழியர்கள்17 லட்சம் பேர்.இவ்வளவு பிரம்மாண்டமான இந்திய ரெயில்வே பயணிகள் போக்குவரத்துக்கும், சரக்குகள் போக்குவரத்துக்கும் இன்றியமையாததாக உள்ளது.இந்திய ரெயில்வேயால் அண்மையில் அமைக்கப்பட்ட கொங்கண் இருப்புப் பாதை ஒரு பொறியியல் சாதனையாகக் கருதப்படுகிறது. இப்பாதை மும்பையிலிருந்தும் பிற வட இந்திய நகரங்களிலிருந்தும் பெங்களுர், திருவனந்தபுரம் செல்லும் நேரத்தையும், தூரத்தையும் வெகுவாகக் குறைத்துள்ளது. பல சுற்றுவழிப் பாதைகள் நேரடிப் பாதைகளாகி உள்ளன.'சதாப்தி எக்ஸ்பிரஸ்' 'ராஜதாணி எக்ஸ்பிரஸ்' போன்ற ரெயில்கள் இந்திய ரெயில்வேயின் முன்னேற்றப் படிகளாக அமைந்துள்ளன.
1 உங்கள் கருத்து:
//இந்திய ரெயில்வேயால் அண்மையில் அமைக்கப்பட்ட கொங்கண் இருப்புப் பாதை ஒரு பொறியியல் சாதனையாகக் கருதப்படுகிறது//
ஆமாங்க எவ்ளோ மலை, குகைகளை குடைஞ்சி - அருமையா இருக்கும் கொங்கன்லே பயணம் போறது...
Post a Comment